டெல்லி:

டகிழக்கு ஆர்ப்பாட்டங்களை திசை திருப்ப பாஜக எனது பேச்சை பெரிதுபடுத்துகிறது என்று ராகுல்காந்தி கூறினார். ஏற்கனவே பிரதமர் மோடி, டெல்லி பாலியல் கொடுமைகளின் தலைநகராக உள்ளதாக பேசிய வீடியோ தன்னிடம் உள்ளது என்றும் தெரிவித்தார்.

ராகுலின் ரேப் இன் இந்தியா கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக பெண் எம்.பி.க்கள் நாடாளு மன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.  பாஜவினர் ராகுலின் கருத்து குறித்து, சமூக வலைதளங் களில் பதிவிட்டு வருகின்றனர்.

ராகுலின் ரேப் இந்தியா பேச்சு  இந்தியாவுக்கு அவமானம் என்று மத்தியஅமைச்சர் ஸ்மிருதி இரானி லோக்சபாவில் ஆசேசமாக பேசினார். மற்றொரு எம்.பி.யான  லாக்கெட் சாட்டர்ஜி,  ராகுலின் பேச்சு, இந்திய பெண்கள் மற்றும் பாரத் மாதாவுக்கு அவமானம் என்று கொந்தளித்தார். அதைத்தொடர்ந்து அவையில் அமளியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி,  குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் வன்முறைகள் பரவி வருகின்றன. இதை மறைக்கவே, பாஜகவினர் எனது பேச்சை பெரிதுபடுத்தி திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

ஏற்கனவே பிரதமர் மோடி, டேல்லி பாலியல் வன்முறைகளின் தலைநகராக திகழ்கிறது என்று பேசிய வீடியோ கிளிப் தன்னிடம் இருப்பதாகவும், இதை அனைவரும் பகிரும் வகையில் டிவிட் போட முடியும் என்றும்,  பாஜகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.