தேசிய பசுமை தீர்ப்பாய தலைவராக நீதிபதி கோயல் நியமனம்

டில்லி:

சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டது. இந்த தீர்ப்பாய தற்காலிக தலைவராக நீதிபதி ஜாவத் ரஹிம் பதவி வகித்தார்.

இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே கோயல் பசுமை தீர்ப்பாய தலைவராக இன்று நியமிக்கப்பட்டார். 2014-ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ள கோயல் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை அதிகம் விசாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.