கொலிஜியம் முடிவு : தலைமை நீதிபதிக்கு நீதிபதி செல்லமேஸ்வர் கடிதம்

--

டில்லி

நீதிபதி செல்லமேஸ்வர் கொலிஜியம் முடிவு குறித்து தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

உச்சநீதிமன்ற கொலிஜியம் தேர்ந்தெடுத்த நீதிபதி ஜோசப்புக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பதவி வழங்க மறுத்து விட்டது.   இதை ஒட்டி நேற்று கொலிஜிய நீதிபதிகள் கூட்டம் நடைபெற்றது.   அத்துடன் நீதிபதி செல்லமேஸ்வரை தவிர மீதமுள்ள மூவர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை சந்தித்தனர்.   அப்போது கொலிஜியம் அளித்த பரிந்துரையை நிறைவேற்றுமாறு அவரிடம் கூறி உள்ளதாக தகவல்கள் வந்தன.

நீதிபதி செல்லமேஸ்வர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்குமாறு மத்திய அரசை தலைமை நீதிபதி வற்புறுத்த வேண்டும் எனவும் நீதிபதி ஜோசப்புக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பதவி வழங்குவதில் இருந்து பின்வாங்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.