டெல்லி:

ர்ச்சைக்குரிய  ராமஜென்ம பூமி தீர்ப்பில் சிறுபைன்மையினருக்கு அநீதி கிடைத்திருப்பதாக, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி அதிருப்தி தெரிவித்து உள்ளார். அரசியலமைப்பின் மாணவராக தீர்ப்பை ஏற்றுக் கொள்வது எனக்கு கொஞ்சம் கடினமாக உள்ளது என்று கூறி உள்ளார்.

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்குலி, அயோத்தி தீர்ப்பு அவரது மனதில் ஒரு சந்தேகத்தை உருவாக்கியுள்ளது என்றும் அவர் “மிகவும் குழம்பிப்போய் உள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.

சுமார் 500 ஆண்டுகளாக நீடித்து வரும் அயோத்தி ராமஜென்ம பூமி நிலம் விவகாரத்தில், உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி உள்ளது. அதன்படி சர்ச்சைக்குரிய இடம் இந்துக்களுக்கு சொந்தமானது என்றும், இஸ்லாமியர்களுக்கு வேறு இடம் ஒதுக்கவும் கடந்த 9ந்தேதி (09-11-2019) அன்று தீர்ப்பை வழங்கியது.

இந்த தீர்ப்பை ஒரு தரப்பினரும் வரவேற்ற நிலையில், சிலர் தீர்ப்பு குறித்து அதிருப்தியும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதியான ஏ.கே. கங்குலி எனப்படும் அசோக் குமார் கங்குலி, தீர்பை விமர்சித்து உள்ளார். தீர்ப்பு, இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளது என்று குற்றம் சாட்டி உள்ளார்.

தீர்ப்பு குறித்து  கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நீதியரசர் ஏ.கே.கங்குலி,  பல ஆண்டுகளாக அங்கு ஒரு மஸ்ஜித் இருந்ததை சிறுபான்மையினர் பல தலைமுறைகளாக வழிபட்டு வந்தார்கள்.   அது இடிக்கப்பட்டுள்ளது.  தற்போது,  அதன் மீது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, ஒரு கோயில் கட்டப்பட இருக்கிறது.

இந்த தீர்ப்பு  என் மனதில் ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளது….  அரசியலமைப்பின் மாணவராக, இந்த தீர்ப்பை  ஏற்றுக்கொள்ள கடினமாக உள்ளது.

சர்ச்சைக்குரிய அந்த இடத்தில்,  1856-57 இல் இல்லையென்றாலும், நிச்சயமாக 1949 முதல், அங்கு தொழுகை நடத்தப்பட்டு வந்துள்ளது., அது ஆவணங்களில் உள்ளது.  எனவே, நமது அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த போதும், தொழுகை அங்கு நடத்தப்பட்டு வந்துள்ளது.  தொழுகை நடத்தப்பட்ட அந்த இடம்,  ஒரு மஸ்ஜித் என்று அங்கீகரிக்கப்பட்டால், சிறுபான்மை சமூகத்திற்கு அவர்களின் மத சுதந்திரத்தை பாதுகாக்கும் உரிமை உண்டு -அது அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு அடிப்படை உரிமை என்று தெரிவித்து உள்ளார்.

தற்போது அந்த இடம் ராம் லல்லாவுக்கு சொந்தமானது என்று கூறி, அந்த இடத்தில் ஒரு கட்டிடம் வர நீதிமன்றம் அனுமதிக்கிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த நில உடைமை குறித்து உச்ச நீதிமன்றம் முடிவு செய்யுமா?  அரசியலமைப்பு வந்தபோது அங்கு ஒரு மஸ்ஜித் இருந்தது என்பதை உச்ச நீதிமன்றம் மறக்குமா? ”அரசியலமைப்பு மற்றும் அதன் விதிகள் மூலம், அதைப் பாதுகாப்பது உச்சநீதிமன்றத்தின் பொறுப்பாகும்.”

அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பு இருந்தவை உச்சநீதிமன்றத்தின் பொறுப்பில் வராது.  அதற்கு முன்பு இந்திய ஜனநாயக குடியரசு என்று எதுவும் இருக்கவில்லை. பின்னர் ஒரு மஸ்ஜித் இருந்த இடத்தில், , ஒரு பெளத்த ஸ்தூபம் இருந்த இடத்தில், ஒரு தேவாலயம் இருந்த இடத்தில்… இதுபோன்ற தீர்ப்புகளை  நாம் வழங்க ஆரம்பித்தால், நிறைய கோயில்கள் மற்றும் மஸ்ஜிதுகள் மற்றும் பிற கட்டமைப்புகள்   இடிக்கப்பட வேண்டியிருக்கும்.

500 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தை யார் வைத்திருந்தார்கள், யாருக்கும் தெரியுமா?  நாம் வரலாற்றை மீண்டும் உருவாக்க முடியாது.  எது இருந்ததோ அதைப் பாதுகாப்பதே நீதிமன்றத்தின் பொறுப்பு.  எதுவாக இருந்தாலும் உரிமைகளைப் பாதுகாக்கவேண்டும்.  வரலாற்றை மீண்டும் உருவாக்க நீதிமன்றத்திற்கு எந்த கடமையும் இல்லை.

ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு என்ன இருந்தது, என்பதை நீதிமன்றம் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. மஸ்ஜித் இருந்தது என்றுதான் நீதிமன்றம் சொல்ல வேண்டும் – அது ஒரு உண்மை.  ஒரு வரலாற்று உண்மை மட்டுமல்ல, (ஆனால்) எல்லோரும் பார்த்த ஒரு உண்மை.  அதன் இடிப்பு அனைவராலும் பார்க்கப்பட்டது.  அதை மீட்டெடுக்க வேண்டும்.  அவர்களுக்கு(முஸ்லிம்களுக்கு) ஒரு மஸ்ஜிதை வைத்திருக்க உரிமை இல்லை என்றால், ஒரு மஸ்ஜிதை கட்ட ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்குமாறு அரசாங்கத்தை எவ்வாறு வழிந டத்துகிறீர்கள்?  ஏன்?  மஸ்ஜித் இடிக்கப்பட்டது முறையானது அல்ல என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்.

நானாக இருந்தால்  ஒன்று அந்த பகுதியில் மஸ்ஜிதை மீண்டும் கட்டியிருக்க சொல்லியிருப்பேன்.  அல்லது அது சர்ச்சைக்குரியதாக இருந்தால், அந்த பகுதி, ‘மஸ்ஜிதும் இல்லை, அந்த பகுதியில் கோயிலும் இல்லை’ என்று சொல்லியிருப்பேன்.

நீங்கள் ஒரு மருத்துவமனையையோ அல்லது பள்ளிக்கூடத்தையோ,  அல்லது கல்லூரியை உருவாக்கலாம் என்று கூறியிருப்பேன்.  வெவ்வேறு பகுதிகளில் ஒரு மஸ்ஜித அல்லது கோவில் கட்டவும் கூறியிருப்பேன்.  இந்த தீர்ப்பு காரணமாக நான் மிகவும் கலக்கம் அடைகிறேன்.  ஆனால், இந்த தீர்ப்பு குறித்து பெரும்பாலோர் இதை தெளிவாக சொல்லப்போவதில்லை.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.