நியாயம் வென்றிருக்கிறது! துரைமுருகன்

டில்லி,

2ஜி வழக்கில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட 14 பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி அறிவித்தார். அரசு குற்றச்சாட்டை நிரூபிக்க தவறிவிட்டதாக அவர் கூறி உள்ளார்.

2ஜி வழக்கில் இருந்து கனிமொழி, ஆ.ராசா விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று டில்லி கோர்ட்டுக்கு வந்திருந்த திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறியதாவது,

இந்த வழக்கில்  நியாயம் வென்றிருக்கிறது. இதன் காரணமாக   திராவிட முன்னேற்ற கழகம் நிமிர்ந்து நிற்கும். திராவிட இயக்கத்தின்மீது புனையப்பட்ட கறை அகற்றப்பட்டது. நீண்ட நாட்களாக நடைபெற்ற இந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வந்திருக்கிறது.இனிமேல் திமுகவுக்கு எல்லாமே வெற்றிதான்  என்று திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறி உள்ளார்.