டில்லி,

நீதிபதி கர்ணனுக்கு மனநல பரிசோதனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளுக்கு பிடிவாரன்டு பிறப்பு நீதிபதி கர்ணன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் ஊழல் முறைகேடு தடுப்பு மற்றும் நாட்டில் அமைதியை நிலைநாட்ட வேண்டி தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ளதாக கூறியுள்ளார்.

இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, செல்ல மேஸ்வர், ராஜன் கோகேய், மதன் பி லோகூர், பினாகி சந்திர கோஸ், குரியன் ஜோசப் ஆகியோரை வருகிற 8-ம் தேதி அன்று ஆஜர்படுத்துமாறு பிடிவாரன்டு  பிறப்பித்து கொல்கத்தா உயர்நீதிமன்ற பதிவாளருக்கு கர்ணன் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகள் வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது என உத்தரவிட்டு பரபரப்பை ஏற்படுத்திய கர்ணன் குறித்து, உச்சநீதி மன்ற நீதிபதிகள், கர்ணன் மனநிலை குறித்து வரும் 5ந்தேதிக்குள் மருத்துவ பரிசோதனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், நீதிபதி கர்ணன் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி  உள்பட 7 நீதிபதிகளுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதி கர்ணனின் அலம்பல் உத்தரவுகள் மீண்டும்  இந்திய நீதித்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.