நீதிபதி கர்ணன் சரண்டர் ஆக மாட்டார்!! மகன் திட்டவட்டம்

டெல்லி:

‘‘என் தந்தை கர்ணன் சரணடைய மாட்டார்’’ -என நீதிபதி கர்ணனின் மகன் சுகன் கூறியுள்ளார்.

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 7 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு அவருக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது.

கடந்த 9ம் தேதி பிறப்பித்த அந்த உத்தரவில் அவரை உடனடியாக கைது செய்ய மேற்கு வங்க போலீஸ் டி.ஜி.பி.க்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால் அதன்படி அவரை கைது செய்ய மேற்கு வங்க போலீசார் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது.

இந்நிலையில் நீதிபதி கர்ணனுக்கு உச்சநீதிமன்றம் விதித்த 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்ய கோரி ஜனாதிபதி மாளிகையில் அவரத மகன் சுகன் மனு அளித்துள்ளார். அப்போது, ‘‘எனது தந்தை கர்ணன் சரணடைய மாட்டார்’’ என சுகன் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.