டெல்லி:
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜெகதீஷ் கேஹர் நாளை பதவி ஏற்கிறார். அவருக்கு ஜனாதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள டி.எஸ். தாகூர் ஓய்வுபெறுகிறார். இவருக்கு பதிலாக மூத்த உச்சநீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹரை நியமனம் செய்து ஜானாதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து நாளை அவர் 44வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்கிறார். ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
64 வயதாகும் ஜெகதீஷ் சிங் கேஹர், சீக்கிய சமுதாயத்தில் இருந்து நியமிக்கப்படும் முதல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஆகஸ்ட் 27ம் தேதி வரை இவர் இந்த பதவியில் இருப்பார். பிரதமர் மோடி, லோக்சபா எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருடன் சேர்ந்து, புதிய சிபிஐ இயக்குநர தேர்ந்தேடுப்பதுதான் இவரது முக்கிய பணியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.