உச்சநீதி மன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் கோகாய்

டில்லி:

ச்சநீதி மன்றத்தின்  46வது தலைமை நீதிபதியாக நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவி ஏற்றார். அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை  குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்பட  மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த  தீபக் மிஸ்ராவின் பதவிக்காலலம் (அக்டோபர் 2-ம் தேதி) ஓய்வு பெற்ற நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக  மூத்த நீதிபதி ரஞ்சன் கோகாய் நியமிக்கப்பட்டார்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தரான நீதிபதி ரஞ்சன் கோகாய்,  அசாமில் வழக்கறிஞராக பணியாற்றிய பிறகு 2001-ம் ஆண்டு கவுஹாத்தி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியானார்.

பின்னர் 2012-ம் ஆண்டில் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு பல்வேறு வழக்குகளை சந்தித்த நிலையில், சுமார்  6 ஆண்டுகளுக்கு பிறகு  தற்போது தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக, ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் அடுத்தாண்டு நவம்பர் 17-ம் தேதி வரை உள்ளது.