புதுடெல்லி:

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரிக்க நீதிபதி எஸ்ஏ. பாப்டே நியமிக்கப்பட்டுள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.

இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று கூறிய தலைமை நீதிபதி ரஞ்சான் கோகாய், இதன் பின்னணியில் பெரும் சதி இருப்பதாகக் கூறினார்.

உச்ச நீதிமன்றத்தில் உள்ள 22 நீதிபதிகளுக்கும் அந்த பெண் புகாரை பிரமாணப் பத்திரமாக அனுப்பினார்.
இதனையடுத்து, இதனை விசாரிக்க 3 நபர் கொண்ட சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர்வும் எவ்வித உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க நீதிபதி எஸ்ஏ.பாப்டேவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.

நீதிபதி எஸ்ஏ.பாப்டே.

நீதிபதி பாப்டே தலைமையிலான விசாரணை குழுவில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

நீதிபதி பாப்டே உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாவார். கோகாய்க்கு பின் சீனியாரிட்டியின்படி இவர் தான் தலைமை நீதிபதியாக பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.