டில்லி கிரிக்கெட் மைதானத்தில் கபில்தேவுடன் கனடா பிரதமர்!

டில்லி:

ந்தியாவுக்கு சுற்றப்பயணம் வந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் தனது குழந்தைகளுடன்  தலைநகர் டில்லியில் உள்ள கிரிக்கெட் மைதானத்துக்கு வருகை தந்தார். அங்கு தனது குழந்தைகளிடம் பேட்டை கொடுத்து கிரிக்கெட் விளையாடக் கூறினார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 7 நாள் பயணமாக  கடந்த 17ந்தேதி   தனது மனைவி மற்றும்  3 குழந்தைகளு டன்  இந்தியா வந்தார்.

அவர் இந்தியாவில், தாஜ்மஹால், சீக்கியரின் பொற்கோவில் உள்பட பல இடங்களை குடும்பத்துடன் சுற்றிப் பார்த்த்தார்.

இந்நிலையில் இன்று மதியம்  டில்லியில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு தனது குழந்தைகளுடன் வந்தார்.  கிரிக்கெட் மைதானத்திற்கு வந்த அவரை பார்க்க ஏராளமானோர் கூடியிருந்தனர்.

பேட்டை சுழற்றியபடி வந்த அவர் தனது குழந்தைகளிடம் பேட்டை கொடுத்து விளையாட அறிவுறுத்தினார். அவருடன்  முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் மற்றும் முகமது அசாருதின் ஆகியோர்  வந்திருந்தனர்.

அதைத்தொடர்ந்து  நாளை (23ந்தேதி)  பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். அப்போது இரு நாட்டு தலைவர்களிடையே  பாதுகாப்பு விவகாரம், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை  குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.  அதைத்தொடர்ந்து  இருநாடுகள் இடையே பொருளாதார ஒத்துழைப்புத் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்திடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும்  24ம் தேதி டில்லியில் நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றில்  மாணவர்கள் இடையே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உரை நிகழ்த்தவுள்ளார்.

இன்று இந்தியா வந்துள்ள  கனடா பிரதமர் குடும்பத்தினருடன், அந்நாட்டு பாதுகாப்புத் துறை, வெளியுறவுத் துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்களும் வந்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி