மகளிர் தினத்தை முன்னிட்டு ’99 Songs’ படத்திலிருந்து ஜூவாலமுகி பாடல் வெளியீடு….!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 99 Songs .

அறிமுக இயக்குனர் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் இத்திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மூன்று மொழிகளில் வெளியிடப்படவுள்ளது. ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும் இத்திரைப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மானின் தயாரிப்பு நிறுவனமான ஒய்.எம் மூவிஸ் தயாரிக்கிறது மற்றும் ஐடியல் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜூவாலமுகி பாடல் வெளியாகியுள்ளது .

மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களை கொரவிக்கும் விதமாக இப்பாடலை தான் வெளியிட்டு இருப்பதாக ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த பாடலை பூர்வித் கௌசிக், சாஷ்வத் சிங் பாடியுள்ளனர். பாடல் வரிகளை நவ்நீத் விரிக் எழுதியுள்ளார்.