ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘காற்றின் மொழி’

பிரபல டைரக்டர் ராதாமோகனின் அடுத்த படத்தில் ஜோதிகா ஒப்பந்தமாகி உள்ளார். அந்த படத்தின் பெயர் காற்றின் மொழி.

ஏற்கனவே ராதாமோகன் இயக்கத்தில் மொழி படத்தில் நடித்திருந்த ஜோதிகா, தற்போது காற்றின் மொழி என்ற புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

தற்போது ஜோதிகா நாச்சியார் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதைமுடித்து விட்டு, ராதா மோகன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தில் நடிகர் விதார்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது.

துமாரி சுலு என்று இந்தியில் வெற்றிகரமாக ஓடிய படத்தை தமிழில் இயக்குகிறார் ராதாமோகன்.

வட மாநிலங்களில் வெற்றிகரமாக ஓடிய ‘துமாரி சுலு’என்ற இந்தி படத்தை தழுவிய கதை, இது. இந்தி படத்தில், வித்யாபாலன் கதாநாயகியாக நடித்து இருந்தார். அவருக்கு ஜோடியாக மானவ் கவுல் என்ற இளம் கதாநாயகன் நடித்து இருந்தார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில், நேகா நடித்திருந்தார். இந்த மூன்று பேரை சுற்றி கதை பின்னப்பட்டு இருந்தது.

இதில் வித்யாபாலன் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கிறார். அவருடைய கணவராக விதார்த் நடிக்கிறார். நேகா நடித்த வேடத்தில், லட்சுமி மஞ்சு நடிக்கிறார். இவர், தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகள் ஆவார்.

சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் ராதாமோகன், இந்த படத்தின் தலைப்பை கண்டுபிடிக்கும் படி ரசிகர்களுக்கு போட்டி வைத்தார். தற்போது அதற்கான விடை கிடைத்திருக்கிறது. இப்படத்திற்கு ‘காற்றின் மொழி’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.