ஜோதிகா நடிக்கும் ‘காற்றின் மொழி’ படத்தின் டீசர் வெளியானது

டிகை ஜோதிகா நடிக்கும் ‘காற்றின் மொழி’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

ஆகஸ்டு 15ந்தேதி ஜோதிகா  நடித்து வரும் காற்றின் மொழி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் ஜோதிகா 10 கட்டளைகளுடன் நிற்பது போன்று வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.

இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடித்துவரும் படம்  “காற்றின் மொழி”. இந்த படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. வரும்  அக்டோபர் 18ம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நடிகை வித்யா பாலன் நடிப்பில், இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம்  “தும்ஹாரி சுலு”. இந்த படத்தின் கதை தமிழில் ரிமேக் செய்யப்பட்டுள்ளது.  இந்த படத்தில் வித்யாபாலனின் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கிறார்.

டீசரை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்… 

https://www.youtube.com/watch?time_continue=3&v=o7TlQMfRGTc

திருமணமான பெண் ஒருவருக்கு வானொலியில்  ரேடியோ ஜாக்கியாக வேலை கிடைப்பதால் அவர்களின் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பதைப் பற்றி இத்திரைப்படம் கூறுகிறது.  படத்தை, ஏற்கனவே மொழி படத்தை இயக்கிய ராதாமோகனே இயக்குகிறார். இந்த படத்தில் ஜோதிகாவின் கணவராக  வித்தார்த் நடித்து வருவதாக கூறப்படு கிறது.  இவர்களை தவிர  லட்சுமி மஞ்சு, குமாரவேல், எம்.எஸ். பாஸ்கர், மனோபாலா, மோகன் ராமன், உமா பத்மநாபன், சிந்துசுஷேரன், சீமா டேன்ஜா, மாஸ்டர் தேஜாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்திற்கு இசை ஏ.எச். காஷிப் அமைத்துள்ளார். பாடல்கள் மதன்கார்கி, கதை சுரேஷ் திரிவேணி, இயக்கம் ராதாமோகன். தயாரிப்பு தனஞ்செயன். தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.