ஜோதிகாவின் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது…!

2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் புதிய படம் பூஜையுடன் ஆரம்பித்துள்ளது . இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தில் ஜோதிகா, சசிக்குமார், சமுத்திரக்கனி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் கலையரசன், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இயக்குனர் இரா.சரவணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.

இப்படத்தின் துவக்க விழாவின் பூஜை அகரம் பவுண்டேஷன் அலுவலகத்தில் நடைபெற்றது.