தேதோ சாக்கு போக்கு சொல்லி காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.பக்கம் தாவியுள்ளார், மத்திய பிரதேசத்து ஜோதிர் ஆதித்ய சிந்தியா.

இந்த நிகழ்வை-
’’நேற்று பாட்டி செய்ததை இன்று பேரன் செய்துள்ளார்’’ என்கிறார்கள், மத்திய பிரதேச காங்கிரசார்.
பாட்டி யார்? என்ன செய்தார்?

பாட்டியின் பெயர் விஜயராஜே சிந்தியா. மன்னர் குடும்பத்தை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ்காரர்.
1967 ஆம் ஆண்டில் மத்தியபிரதேச காங்கிரஸ் முதல்வராக இருந்த டி.பி.மிஸ்ராவுக்கு எதிராக கலகம் செய்து, கட்சியில் இருந்து வெளியேறினார்.

குணா மக்களவை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். வென்றார். பின் நாட்களில், இன்றைய பா.ஜ.க.வின் நாற்றங்காலான ஜனசங்கம் கட்சியில் சேர்ந்தார்.

53 ஆண்டுகளுக்கு பிறகு விஜயராஜே சிந்தியாவின் பேரன் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, பாட்டி எழுதிய அதே கதையை மீண்டும் அரங்கேற்றியுள்ளார்.

பாட்டிக்கு –அப்போதைய முதல்வர் மிஸ்ராவுடன் மோதல். பேரனுக்கு இப்போதைய முதல்வர், கமல்நாத்துடன் தகராறு.

பாட்டி, சுயேச்சையாக நின்று, கட்சி மாறி பதவி பெற்றார்.

பேரன் பா.ஜ.க. சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாகி பதவி பெறப்போகிறார்.

அவருக்கான இலாகா கூட பேசி முடிக்கப்பட்டு விட்டது.

‘’வணிகம் மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து’’ துறைக்கு, அமைச்சரவார் என சொல்கிறார்கள்.

–லட்சுமி பிரியா