கா.பாலச்சந்திரன் ஐஏஎஸ் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமனம்

சென்னை

டிஎன்பிஎஸ்சி யின் பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ள சூழலில், கா.பாலச்சந்திரன் ஐஏஎஸ் அதன் தலைவராக, தமிழக அரசு நியமித்துள்ளது.

இவர் வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மைச் செயலாளராகப் பொறுப்பு வகித்தவர்.

2015 அக்டோபர் முதல் அருள்மொழி ஐஏஎஸ் இப்பொறுப்பை வகித்து வந்தார். அவரின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து கா.பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டார்.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் சூழலில் கா.பாலச்சந்திரன் அவர்களுக்கு இப்பொறுப்பு மிகவும் சவாலாகவே அமையும் எனலாம்.