மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று

சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.