21-ம் நூற்றாண்டின் நிஜாம் என்று தன்னை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் நினைத்துக் கொள்கிறார்: பாஜக குற்றச்சாட்டு

ஐதராபாத்:

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தன்னை 21-ம் நூற்றாண்டின் நிஜாம் என்று நினைத்துக் கொள்கிறார் என பாஜக தேசிய செயலாளர் ராம்தேவ் விமர்சித்துள்ளார்.


செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

பீகார் உட்பட தெலங்கானா, கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கூடுதலாக வெற்றி பெறுவோம். எதிர்கட்சிகளுக்கு பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள்தான் உள்ளது.

மம்தா பானர்ஜி, ஸ்டாலின், ஹெச்டி தேவேகவுடாவை சந்தித்து, கூட்டாட்சி முன்னணியில் சேர சந்திரசேகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார்.
யாருமே அவரை கண்டுகொள்ளவில்லை. சந்திரசேகர் ராவ் 21&ம் நூற்றாண்டின் நிஜாம் போல் தன்னை நினைத்துக் கொண்டு செயல்படுகிறார். தனது கட்சியை குடும்ப நிறுவனமாக மாற்றிவிட்டார் என்று குற்றஞ்சாட்டினார்.

 

Leave a Reply

Your email address will not be published.