Random image

நாளை தெரியும்: தெலங்கானா சட்டசபை முன்கூட்டியே கலைப்பா?

ஐதராபாத்:

மாநில சட்டசபையை கலைக்க தெலுங்கான முதல்வர் சந்திரசேகரராவ் முடிவு செய்துள்ளதாக தகவ்லகள் வெளியாகி உள்ளது. முன்கூட்டியே சட்டமன்ற  தேர்தலைச் சந்திக்கும் விதமாக சந்திரசேகரரர்வ் நாளை சட்டமன்றம் கலைக்கப்படுவது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிய முதல்வர் சந்திரசேகரராவ், ஆட்சியைக் கலைப்பதாக இருந்தால் தொண்டர்களிடம் முன்கூட்டியே தெரிவிப்பேன் என கூறியிருந்த நிலையில் நாளை காலை ஆட்சி கலைப்பு குறித்து அறிவிப்பார் என கூறப்படுகிறது.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவுக்க லக்கி எண் 6 என்பதால், காலை 6.45 மணிக்கு சட்டமன்றம் கலைப்பு குறித்து அறிவிப்பார் என்றும், அதைத்தொடர்ந்து காலை 9.33 மணிக்கு கவர்னரை சந்தித்து அமைச்சரவை ராஜினாமா கடிதத்தை வழங்குவார் என்றும் கூறப்படுகிறது.

இதை உறுதிசெய்யும் விதமா, தெலங்கானா அமைச்சர்கள் அவர்களுக்கு கீழ் உள்ள மாவட்டங்களின் எம்எல்ஏக்களிடம், தொகுதி வளர்ச்சி நிதிக்கு விண்ணப்பிக்கும்படி தெரிவிக்கபட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

தேசிய கட்சிகளுக்கு அடிமையாக இருக்கக்கூடாது என்ற கொள்கையுடை தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ், முன்கூட்டியே தேர்தல் நடத்தினால் ஆட்சியை மீண்டும் பிடித்துவிடலாம் என்று நம்பிக்கை கொண்டுள்ளார்.