டில்லி:

த்திய அரசின் தலைமை வழக்கறிஞராக கே.கே. வேணுகோபால் இன்று பதவி ஏற்றார்.

ஏற்கனவே தலைமை வழக்கறிஞராக இருந்த முகுல்ரோத்தகி ஓய்வு பெற்றதை  தொடர்ந்து கே.கே.வேணுகோபாலை மத்தியஅரசு புதிய அட்டர்னி ஜெனரலாக  நியமனம் செய்தது.

இந்திய அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் நியமிக்கப்பட உள்ளார். அதற்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பதவிக்கு பலருடைய பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், பாபர் மசூதி வழக்கில் அத்வானிக்கு ஆதரவாக வாதாடிய  மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், தலைமை வழக்கறிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு, குடியரசுத்  தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கே.கே.வேணுகோபால் மத்திய அரசின் புதிய அட்டர்னி ஜெனரலாக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு வழக்கறிஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழகத்தை சேர்ந்த வேணுகோபால்,  மொரார்ஜி தேசாயின் ஆட்சிக்காலத்தில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்துள்ளார்.

பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷண் விருதுகளையும் பெற்றுள்ளார்.

மறைந்த தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பல்வேறு வழக்குகளில் ஆஜராகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.