மீண்டும் இயக்குனராகிறார் K.P.ஜெகன்

இயக்குனர் K.P.ஜெகன் 13 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நடித்த ‘புதிய கீதை’ படத்தை இயக்கினார். தற்போது மீண்டும் புதிய படமொன்றை இயக்கவுள்ளார்.

இயக்குனர் K.P.ஜெகன் புதிய கீதை படத்தைத் தொடர்ந்து கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை ஆகிய படங்களை இயக்கினார். ஆனால் அப்படங்கள் வெற்றி பெறவில்லை. பின்னர் மாயண்டி குடும்பத்தார் படத்தின் மூலம் நடிகரானார். அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது கயல் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்கிறார்.