சென்னை:

மிழகத்தின் புதிய தலைமை செயலாளராக நிதித்துறை செயலாளராக இருந்து வந்த கே.சண்முகம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அதுபோல, புதிய காவல்துறை டிஜிபியாக கே.திரிபாதி நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவர்னர் மாளிகை வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் 45வது தலைமை செயலாளராக இருந்து வந்த கிரிஜா வைத்தியநாதன், இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில், 46வது தலைமை செயலாளராக சண்முகம் நியமிக்கப்பட்டு உள்ளார்.

அதுபோல ஐபிஎஸ் அதிகாரி ஜேகே.திரிபாதியை டிஜிபியாகவும் (சட்டம்-ஒழுங்கு) கவர்னர் மாளிகை நியமனம் செய்து  இருவரும் 1985-ம் ஆண்டு தமிழகத்தில் பணியை தொடங்கிய அதிகாரிகள் ஆவர்.

தற்போது தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள சண்முகம், சேலம் மாவட்டம் வேலப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்த அவர், முதல் பட்டதாரி ஆவார். 1985-ம் ஆண்டு தஞ்சை உதவி கலெக்டராக பணியை தொடங்கினார். அதன்பின்னர், சிவகங்கை, புதுக்கோட்டை கலெக்டராகவும், பல்வேறு முக்கிய துறைகளிலும் பொறுப்பு வகித்துள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் முதல் நிதித்துறை செயலாளராக இருக்கும் சண்முகம், மாநிலத்தின் நிதி நெருக்கடியை சமாளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 9 பட்ஜெட்களையும்,2 இடைக்கால பட்ஜெட்களையும் தாக்கல் செய்திருக்கிறார்.

தமிழக டிஜிபியாக நியமிக்கப்பட இருக்கும் திரிபாதி ஒடிசாவைச் சேர்ந்தவர். கடந்த 30 ஆண்டுகளில் போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.