அனிருத் வெளியிட்ட ‘கே 13’ த்ரில்லர் பட டீசர்…!

பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடித்து வரும் த்ரில்லர் படமான ‘கே 13’ திரைப்படத்தின் டீசரை அனிருத் வெளியிட்டுள்ளார்.

சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார்.எஸ்பி சினிமாஸ் சார்பில் எஸ்.பி.ஷங்கர் மற்றும் சாந்த பிரியா ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

மனநலம் சார்ந்த மிஸ்டரிக்கல் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்தர், காயத்ரி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளர் .