கேஜேஆர் நிறுவனம் தயாரித்து வரும் க/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர் பல மாதங்களுக்கு முன்பு வெளிவந்து வைரலாகி இருந்தது.

ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘க/பெ. ரணசிங்கம்’. பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராகப் பணிபுரிகிறார் ஜிப்ரான்.

இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, ‘பூ’ ராம், வேல.ராமமூர்த்தி , ரங்கராஜ் பாண்டே , ஜி.வியின் தங்கை பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் க/பெ.ரணசிங்கம் திரைப்படம் நேரடியாக OTT-ல் வெளியாகவுள்ளது. Zee 5 நிறுவனம் இதன் உரிமையை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. வரும் அக்டோபர் மாதம் 2-ஆம் தேதியன்று, இத்திரைப்படம் நேரடியாக ஆன்லைனில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது .