Random image

விஜய்சேதுபதியின் ‘க/பெ ரணசிங்கம்’ படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறதா….?

கேஜேஆர் நிறுவனம் தயாரித்து வரும் க/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர் பல மாதங்களுக்கு முன்பு வெளிவந்து வைரலாகி இருந்தது.

ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘க/பெ. ரணசிங்கம்’. பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராகப் பணிபுரிகிறார் ஜிப்ரான்.

இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, ‘பூ’ ராம், வேல.ராமமூர்த்தி , ரங்கராஜ் பாண்டே , ஜி.வியின் தங்கை பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் க/பெ ரணசிங்கம் நேரடியாக ஓடிடி இணையதளம் ஒன்றில் பே வியூ முறையில் வெளியாக உள்ளது என செய்தி வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே தமிழில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் உள்ளிட்ட பல படங்கள் ஓடிடி இணையதளங்களில் வெளியாகி இருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் படமும் இணைந்திருக்கிறது.

You may have missed