விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், வேலராமமூர்த்தி, ரங்கராஜ் பாண்டே, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜீ ப்ளக்ஸில் வெளியான படம் ‘க/பெ ரணசிங்கம்’.

விமர்சன ரீதியாக இந்தப் படம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ‘க/பெ. ரணசிங்கம்’ படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷ் இயக்குநர் விருமாண்டிக்கு காரைப் பரிசாக வழங்கியுள்ளார்.

இயக்குநர் விருமாண்டி தனது குடும்பத்தினருடன் சென்று ஷோரூமிலிருந்து Maruti XL காரை எடுத்துள்ளார்.