பிரபு சாலமன் இயக்கத்தில் ஈராஸ் நிறுவனம் தயாரிப்பில் ராணா, விஷ்ணுவிஷால் நடித்துள்ள படம் காடன்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகிறது. ராணா டக்குபதி இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக ஏ.ஆர்.அசோக் குமார், இசையமைப்பாளராக சாந்தனு மொய்த்ரா ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருக்கும் படக்குழு அதில் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது. ஏப்ரல் 2-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளிலும் வெளியாகிறது.