காலா படம் நஷ்டமா?: தனுஷ் மறுப்பு

சென்னை:

ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மருமகன் தனுஷ் நிறுவனமான வுண்டர்பார் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா திரைப்படம் கடந்த மாதம் 7-ம் தேதி வெளியானது.

காலா படம் நஷ்டத்தை தந்திருப்பதாகவும், சுமார் 40 முதல் 50 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை தயாரிப்பாளர் தனுஷ் திருப்பி கொடுக்க முன் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இது குறித்து வுண்டர்பார் தயாரிப்பு நிறுவனம் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில்,‘‘ காலா படம் எங்களுக்கு நல்ல லாபத்தை தந்துள்ளது. படம் குறித்து எதிர்மறையாக வெளிவரும் கருத்துக்கள் அனைத்தும் உண்மையில்லை.

வுண்டர்பார் நிறுவனத்துக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்த ரஜினிக்கு நன்றி. இந்த படத்தை வெற்றி படமாக்க்கிய ரசிகர்களுக்கும் நன்றி’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.