காலா பட திரையரங்குகள் காலியாக இருக்குமா? : ஆங்கில நாளேட்டின் ஐயம்

சென்னை

டிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியாக உள்ள காலா திரைப்படத்தின் டிக்கட்டுகள் மந்தமாக விற்பனை ஆவதாக தி இந்து ஆங்கில நாளேடு தெரிவித்துள்ளது.

ரஜினிகாந்த் நடித்து வெளியாகும் படங்களுக்கு ரசிகர்களிடையே ஆரம்ப கால வரவேற்பு மிக அதிகமாக இருக்கும்.    அவருடைய தோல்விப் படங்கள் என கருதப்படும் படங்களுக்கும் முன்பதிவு தொடங்கிய உடனேயே இரு வாரங்களுக்கான டிக்கட் விற்கப்பட்டு விடும்.   ஆனால் தற்போது வெளியாக உள்ள காலா திரைப்பட டிக்கட்டுகள் விற்பனை மந்தமாக உள்ளதாக “தி இந்து” ஆங்கில நாளேடு தெரிவித்துள்ளது.

அந்த செய்தியில், “காலா டிக்கட் முன்பதிவு தொடங்கி உள்ள பல திரையரங்குகளில் வழக்கத்துக்கு மாறாக டிக்கட் விற்பனை மிகவும் மந்தமாக உள்ளது.    முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் ரஜினிகாந்த் படம் என்றால் முதல் ஐந்து நாட்கள் டிக்கட்டுகள் விற்பனை ஆகி விடும்.  ஆனால் இதுவரை முதல் இரு தினங்களுக்கான டிக்கட்டுகள் மட்டுமே விற்பனை ஆகி உள்ளது.

வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளுக்கான டிக்கட்டுகளும் இன்னும் முழுமையாக விற்பனை ஆகவில்லை.   காலா திரைப்படம் வெளியிடப்படும் நாளான வரும் வியாழன் அன்றைய டிக்கட்டுகள் மட்டுமே சிறு நகரங்களில் விற்பனை ஆகி உள்ளது.   விரைவில் டிக்கட்டுகள் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்துக்கான விளம்பரம் மிகவும் குறைவாக உள்ளது என்பதாலும் பள்ளிகள்  திறக்கப்பட்டுள்ளதாலும் இந்த நிலை என கூறப்படுகிறது.   ஆனால் ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்குப் பிறகு வரும் படம் என்பதால் இந்த காரணங்களை ஒப்புக் கொள்ள முடியாது.   தற்போது சத்யம் சினிமாஸ் உள்ளிட்ட பல வளாகங்களில் டிக்கட்டுகள் விற்பனை மந்தமாகவே உள்ளது. “ என தி இந்து தெரிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி