‘காப்பான்’ படத்தின் முதல் நாள் வசூல்…!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் ‘காப்பான்’

நேற்று வெளியான இந்தப் படத்தின் பாடல்கள் உரிமையை சோனி மியூசிக் சவுத் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பலவிதமான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.

கேரளாவில் மிக குறைந்த திரையரங்குகளில் தான் வெளிவந்தது, அப்படியிருந்தும் இப்படத்திற்கு, சுமார் ரூ 1.2 கோடி வரை இப்படம் முதல் நாள் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

மேலும், சூர்யாவின் என் ஜி கே அங்கு ரூ 46 லட்சம் தான் முதல் நாள் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.