‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஷூட்டிங் துவங்கும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு…..!
நானும் ரெளடிதான்’ வெற்றியை தொடர்ந்து மறுபடியும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்க முடிவெடுத்துள்ளார் விக்னேஷ் சிவன்.
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
இந்தப் படத்துக்கு ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது .
விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நடிப்பதாக காதலர் தினத்தன்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியானது.
Updates on On-Going projects of #7ScreenStudio:- #Thalapathy's #Master-In Post Production#ChiyaanVikram's #Cobra-Completed 90 days of shoot,25% to shoot#MakkalSelvan's#TughlaqDarbar-Completed 35 days of shoot-40 days to shoot
& #KaathuvaakulaRenduKaadhal – Rolling frm Aug pic.twitter.com/9fCs0LihWN— Seven Screen Studio (@7screenstudio) May 22, 2020
தற்போது ட்விட்டரில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங் பற்றி தயாரிப்பாளர் பதிவிட்டுள்ளார்.
வரும் ஆகஸ்ட் மாதம் இதன் ஷூட்டிங் துவங்கும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இதே நிறுவனம் தான் விஜய்யின் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் உரிமையை வாங்கியுள்ளது. மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளராக லலித் குமார் உள்ளார். தாங்கள் தயாரித்து வரும் படங்கள் எந்த கட்டத்தில் இருக்கிறது என்ற தகவல்களை அந்த ட்விட்டில் லலித் குமார் குறிப்பிட்டுள்ளார்.