சிபிராஜின் ‘கபடதாரி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் சூர்யா….!

கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ’காவலுதாரி’ படம், தமிழில் ‘கபடதாரி’ என்ற பெயரில் ரீமேக்காகி வருகிறது.

இப்படத்தை ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்க , தனஞ்ஜெயன் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் சிபிராஜ், நந்திதா, நாசர், ஜெயப்பிரகாஷ், ஜே.சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சைமன் K கிங் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. நடிகர் சூர்யா இந்த போஸ்டரை வெளியிட்டார். சிபிராஜின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைத்தளம் முழுவதும் காமன் DP வெளியிட்டு அசத்தி வந்தனர் இணையவாசிகள். இதனையடுத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வைரலாகி வருகிறது.

.