துபாய்: கபடி போட்டியில் கென்யாவை வீழ்த்தியது இந்தியா

துபாய்:

இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜெண்டினா, கென்யா ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் கபடி மாஸ்டர்ஸ் தொடர் துபாயில் நடந்து வருகிறது. முதல் மூன்று லீக் ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெற்று நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேயுள்ளது.

இந்நிலையில் இன்று 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, கென்யாவை எதிர்த்து விளையாடிது.தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இந்திய வீரர்களை பிடிக்க முடியாமல் கென்யா வீரர்கள் திணறினர்.

அதேசமயம் கென்யா வீரர்களை அவுட் ஆக்கி இந்திய அணி புள்ளிகளை அள்ளியது. முதல் பாதியில் இந்தியா 29-5 என முன்னிலை வகித்தது.

2வது பாதியில் இந்தியா 21 புள்ளிகளும், கென்யா 10 புள்ளிகளும் பெற்றது. இறுதியில் இந்தியா 50-15 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.