’கபாலி’ பட இயக்குனர் கடும் கண்டனம்.. காட்மேன்’ தொடரை எதிர்ப்பதா?

சமீபத்தில் ’காட்மேன்’ என்ற தொடர் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியானது. பின்னர் அதன் டிரெய்லர் வெளியானது. அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இத்தொடரை பாபு யோகேஸ்வரன் இயக்கி உள்ளார். இவர் ஜெயம் ரவிநடித்த தாஸ் என்ற படத்தை இயக்கியவர்.
‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் வில்லனாக நடித்த டேனியல் பாலாஜி, ஜெயபிரகாஷ். சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர்.


இந்து மதத்தை இழிவுபடுத்துவதாகவும் குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக காட்சிகள் காட்மேன் தொடரில் காட்சிகள் இருப்பதாக கூறப்பட்டதுடன் அத்தொடரை தடை செய்ய வேண்டும் என்று போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து தொடர் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
’காட்மேன்’ வெப் தொடரை நிறுத்தி வைத்ததற்கு ரஜினிகாந்த் நடித்த ’கபாலி’, ’காலா’ படங்களை இயக்கிய பா.ரஞ்சித் டிவிட்டரில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ’காட்மேன், தொடரின் முன்னோட்டத்தை ஒட்டி, அந்த தொடரின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர் மீது அவதூறுகள் பரப்பியும், அச்சுறுத்தியும், பொய்வழக்குகள் தொடுக்கும் சமூக விரோத சனாதன கும்பல்களுக்கும், துணை நிற்கும் தமிழக காவல் துறைக்கும் வன்மையான கண்டனங்கள்.
இந்த தொடரை தயாரிப்பதில் உறுதுணை யாக இருத்துவிட்டு, பிரச்சனை வந்த வுடன் , காட்மேன் தொடரின் குழுவினரை பாதுகாக்க தவறிய தயாரிப்பு நிறுவனத் தாரின் செயல் ஏற்புடையது அல்ல, மேலும் இத்தொடரை வெளியிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என தெரிவித்திருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித்.