‘கபாலி’ இணையதளத்தில் வெளியானது எப்படி?”:  மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை உயர்நீதி மன்றம் )  "கபாலி" படத்தில் ரஜினி
சென்னை உயர்நீதி மன்றம் ) “கபாலி” படத்தில் ரஜினி

சென்னை:

நீதிமன்றம் உத்தரவிட்டும் ‘கபாலி’ படம் இணையதளங்களில் வெளியானது எப்படி? இது  குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையா என்று சென்னை உயர் நீதிமன்‌றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. .

நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் பல்வேறு இணையதளங்கள் ‘கபாலி’ திரைப்படத்தை பதிவேற்றியுள்ளதாக தயாரிப்பாளர் தாணு தரப்பு வழக்கறிஞர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

நீதிபதி கிருபாகரன்
நீதிபதி கிருபாகரன்

வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையா என்றுகேள்வி எழுப்பினார்.

பிறகு  வழக்கு விசாரணையை வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி கிருபாகரன், ‘கபாலி’ தொடர்பான அனைத்து வழக்குகளும் 26ம் தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

 

கார்ட்டூன் கேலரி