கடைசி பெஞ்ச் கார்த்தியாக – பரத்

bharath

இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வர்த்தக நிறுவனங்ககள நடத்தி கொண்டிருக்கும் சுதிர் புதோடா தனது ராமா ரீல்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தயாரிக்கும நேரடி தமிழ் படம் “  கடைசி பெஞ்ச் கார்த்தி “

இந்த படத்தில் பரத் கதாநாயகனாக நடிக்கிறார். பஞ்சாப்பில் மியூசிக்கல் ஆல்பங்களின் டாப் ஸ்டாரும் பிரபல மாடலுமான ருஹானி ஷர்மா மற்றும் அங்கனா ராய் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.  மற்றும் ரவிமரியா, ஞானசம்பந்தன், சனா, சுரேகா, வாணி, இயக்குனர் காசி, மூனார் டேவிட், மதுரை வினோத் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு    –  முஜிர் மாலிக்

இசை    –  அன்பு ராஜேஷ்

பாடல்கள்   –   கலைக்குமார், அண்ணாமலை, ஏக்நாத், இரா.ரவிஷங்கர்

எடிட்டிங்   –  என்.ஹெச் பாபு

ஸ்டன்ட்   –  ட்ராகன் பிரகாஷ்

நடனம்   –  ரமணா, திலீப்

நிர்வாகத் தயாரிப்பு    –  கிரண் தனமலா

தயாரிப்பு மேற்பார்வை   –   நயீம்

தயாரிப்பு   –  சுதிர் புதோடா

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்  –  ரவி பார்கவன். இவர் தமிழில் வெல்டன், ஒரு காதல் செய்வீர்,  திரு ரங்கா ஆகிய படங்களை இயக்கியவர்

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது…

இன்றைய ஸ்மார்ட் போன்களின் பயன் பாட்டால் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகி மக்கள் தனது தனித்துவத்தை இழந்து வருகின்றனர் அதில்காதலும் ஒன்று.  காதலின் அர்த்தம் என்ன ? காதல் என்பது எதுவரை ? இன்றைய இளைய தலைமுறைக்கு காதல் மீது நம்பிக்கை இருக்கிறதா? என முழுவதுமாக காதலை மையமாக கொண்ட கலகலப்பான கமர்ஷியல் திரைப்படமாகவும் இன்றைக்குள்ள காதல் ட்ரெண்டை பிரதிபலிக்கும் வகையில்  “ கடைசி பெஞ்ச் கார்த்தி “ தயாராகிறது.

படப்பிடிப்பு  சென்னை, கோவை, அமலபுரம், ஹைதராபாத் போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது என்றார் இயக்குனர் ரவி பார்கவன்

Leave a Reply

Your email address will not be published.