கடப்பா : பாஜக அமைச்சர் மீது காலணி வீசிய பெண் கைது

டப்பா

ந்திர மாநிலம் கடப்பாவில் மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே மீது காலணியை வீசிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்த போது ஆந்திர மாநிலத்திக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.   ஆனால் இன்று வரை சிறப்பு அந்தஸ்து அளிக்க மத்திய அரசு மறுத்து வருகிறது.   இதனால் மத்திய அரசில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது.    நாடாளுமன்ற கூட்டத்தொடர்  நடைபெறும் போது அக்கட்சியினரின் ஆர்ப்பட்டத்தினால் கூட்டமே முடங்கிப் போனது.

நேற்று ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியில் மத்திய பாஜக அமைச்சரான அனந்தகுமார் ஹெக்டே கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்தார்.    அவரை எதிர்த்து ராயலசீமா பகுதி கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.    ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததையும், கடப்பா மாநிலத்தில் வாக்களித்தபடி ஸ்டீல் தொழிற்சாலை அமைக்காததையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்ட ஒரு பெண் திடீரென அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே மீது காலணியை வீசினார்.     அந்தக் காலணி அமைச்சரின் அருகே விழுந்தது.   அவர் மீது படவில்லை.   காவல்துறையினர் விரைந்து வந்து அந்தப் பெண் உள்பட அனைத்து ஆர்ப்பாட்டக்காரர்களையும் கைது செய்தனர்.   இந்த சம்பவம் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பை உண்டாக்கியது.