கடவுள் இருக்கான் குமாரு ரிலீஸ் தேதி மாற்றம்

kadavul-irukaan-kumaru-movie-news02

ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, நிக்கி கல்ராணி நடிப்பில் ராஜேஷ் இயக்கியுள்ள ‘கடவுள் இருக்குறான் குமாரு’ படத்தின் ரீலீஸுக்கு தடை செய்யும்படி சிங்காரவேலன் தொடர்ந்த வழக்கு புஸ்வானமாகிவிட்டது. இதனால் இந்த படம் இன்று கண்டிப்பாக வெளிவரும் என்று கூறப்பட்டது.

ஆனால் ரிலீசுக்கு முந்தைய நாள் அனைவருக்கும் பணம் செட்டில் செய்ய வேண்டும். இன்று வங்கி விடுமுறை நாள் என்பதாலும், ரூ.500, ரூ.1000 இன்று முதல் செல்லாது என்பதாலும் பணம் செட்டில்மெண்ட் இன்று நடைபெறவில்லை

எனவே கடவுள் இருக்குறான் குமாரு’ படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. புதிய ரிலீஸ் தேதி நவம்பர் 17ம் தேதி அதாவது அடுத்த வாரம் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி