‘கடவுள் இருக்கான் குமாரு’ தடை நீக்கம்: திட்டமிட்டபடி வெளியாகுமா?

 

சென்னை,

டவுள் இருக்கான் குமாரு படத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், படத்துக்கு தடை ஏதுமில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. இதன் காரணாக படம் குறிப்பிட்டபடி 11ந்தேதி திரைக்கு வரும் என தெரிகிறது.

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்துக்கு தடை கோரி சிங்காரவேலன் என்பவர்  மனு தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த நீதிபதி படத்துக்கு இடைக்கால தடை விதித்தார்.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில், ராஜேஷ் இயக்கத்தில் விரைவில் வெளிவர உள்ள படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இந்த படத்தில் ஆனந்தி, நிக்கி கல்ராணி ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் டி.சிவா இப்படத்தை தயாரித்துள்ளார்.

kadavul-irukkan-kumaru-06

இந்த படம் வருகிற நவம்பர் 11ந்தேதி (வெள்ளிக்கிழமை) திரைக்கு வர  இருந்தது. இதை  எதிர்த்து, சேலம் 7G சிவா தான் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை வெளியிட இருக்கிறார். சேலம் 7G சிவாவிடமிருந்து தனக்கு பணம் வர வேண்டும் என்றும் இந்த படம் வெளியானால் தனக்கு பணம் கிடைக்காமல் போய்விடும் என்று சிங்காரவேலன் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அபப்போது படத்திற்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டார்.

இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள், சேலம் சிவா ரூ 35 லட்சத்தை வைப்புத் தொகையாகச் செலுத்திவிட்டு வழக்கைத் தொடர்ந்து நடத்தலாம்  என்றனர்.

மேலும், இந்த வழக்கு படத்தின் தயாரிப்பாளர் டி சிவாவை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்றும், கடவுள் இருக்கான் குமாரு படத்தை வெளியிடத் தடை ஏதுமில்லை என்றும் உத்தரவிட்டார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: "Kadavul irukkan kumaru, 'கடவுள் இருக்கான் குமாரு', Cine Bits, film ban removed, சினி பிட்ஸ், தடை, திட்டமிட்டபடி, நீக்கம், வெளியாகுமா?
-=-