கடையநல்லூர் முன்னாள் திமுக எம்எல்ஏ நயினா முகமது காலமானார்…

நெல்லை: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் திமுக முன்னாள்  எம்எல்ஏ நயினா முகமது (வயது 76 ) உடல்நலக்குறைவால் காலமானார்.

கடையநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித் தார் நயினா முகமது. இவர் கடந்த 1996- 2001 வரை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். பின்னர்,  2004ஆம் ஆண்டில் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

ஆனால், அதிமுக அரசு, தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு அதிமுக ஆதரவை அளித்ததையடுத்து அவர் கட்சியில் இருந்து விலகினார்.

பிறகு எந்தக் கட்சியிலும் சேராமல் இருந்த வந்தவர், சமீப நாட்களாக வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.

You may have missed