இந்தி நடிகர் காதர்கான் குறித்த வதந்தி : மகன் மறுப்பு

மும்பை

பிரபல இந்தி நடிகர் காதர்கான் மறைந்ததாக வந்த செய்தி தவறானது என அவர் மகன் சர்பிராஸ் கான் தெரிவித்துள்ளார்.

புகழ்பெற்ற இந்தி நடிகர் காதர்கான்.   சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் 250 படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறார்.    ஆப்கானிஸ்தானில் உள்ள காபூலில் பிறந்த இவர் மும்பையில் சிவில் எஞ்சினீயரிங் படிப்பை முடித்தவர் ஆவார்.   கடந்த 1973 ஆம் ஆண்டு இந்தித் திரை உலகில் பிரவேசித்த இவர் வில்லன், குணசித்திரம்., காமெடி என பல வேடங்களில் கலக்கி உள்ளார்.

தற்போது கனடாவில் வசிக்கும் இவருக்கு 81 வயது ஆகிறது.   சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் இவர் கனடாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.,   அவர் குணமடைய வேண்டும் என அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல நடிகர்கள் டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தனர்.

திடீரென காதர்கான் இறந்து விட்டதாக ஒரு செய்தி பரவியதால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.   அவருடைய மகனும் பாலிவுட் நடிகருமான சர்பிர்ரஸ் கானிடம் அவர்கள் விசாரித்துள்ளனர்.    இந்த செய்தியை சர்பிராஸ்கான் மறுத்துள்ளார்.   தனது தந்தை மருத்துவமனையில் நலமாக உள்ளதாகவும் யாரும் வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.