காடுவெட்டி குரு நலம்

காடுவெட்டி குரு

சென்னை:

காடுவெட்டி குருவின் உடல் நிலை குறித்து பரவிய தகவலை அவருக்கு நெருக்கமான வட்டாரம் மறுத்துள்ளது. அவர் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.

பா.ம.க. முக்கிய தலைவர்களில் ஒருவரும் வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குரு, அதிரடி பேச்சுக்கும் செயல்பாட்டுக்கும் சொந்தக்காரர். இதனால் இவர் மீது வழக்குள் பாய்ந்தது உண்டு. இரண்டுமுறை குண்டர் சட்டம் பாய்ந்து சிறை சென்றவர்.

கடந்த   2001ல் ஆண்டிமடம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் மற்றும் 2011ல் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றியவர்.

 

பிறந்தநாள் அன்று.. ( மூக்கில் குழாயுடன்)

பா.ம.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவாரன இவர் சமீப நாட்களாக தலைமையினால் ஒதுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

இதற்கிடையே அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது.  இந்த நிலையில் கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி, தனது 57- வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போதும் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார்.  உணவு செலுத்துவதற்காக அவரது மூக்கில் குழாய் செலுத்தப்பட்டிருந்தது. அதோடு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.

சமூகவலைதளங்களில் பிப். அன்று பதிவிடப்பட்ட வாழ்த்து ஒன்று..

இந்த நிலையில் இன்று காலை முதல் அவரது உடல் நிலை குறித்து தகவல்கள் பரவின. இதை அவரது தரப்பினர் மறுத்துள்ளனர்.

“காடுவெட்டி குரு சில உடல் பிரச்சினைகளால் சிகிச்சை எடுத்து வருகிறார் என்பது உண்மையே. அதே நேரம் சிகிச்சையின் பலனாக தேறி வருகிறார். தற்போது இயல்பு நிலைக்கு தேறிவருகிறார்” என்று தெரிவித்தனர்.

கார்ட்டூன் கேலரி