காடுவெட்டி குரு மகன், மருமகனுக்கு அரிவாள் வெட்டு… பரபரப்பு….

காடுவெட்டி:

றைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின்  மகன், மருமகனை ஒரு கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

பாமகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்து வந்தவர் காடுவெட்டி குரு. வன்னியர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார். அவர் உடல் நலமில்லாமல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார்.  அவரது  நினைவிடம் சொந்த ஊரான காடுவெட்டியில் உள்ளது.
காடுவெட்டி குருவின் 2-ம் ஆண்டு நினைவுநாள் நேற்று முன்தினம் கடைபிடிக்கப்பட்டது. காடுவெட்டியில் உள்ள குருவின் நினைவிடத்துக்கு மகன் கனலரசன், மருமகன் மனோஜ் ஆகியோர் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், ஜெயங்கொண்டான் பகுதியில் உள்ள காடுவெட்டி குரு வீட்டிற்கு அருண்குமார் என்பவர் நேற்றிரவு வந்து பேசிச் சென்றதாகவும், அவர் திரும்பும்போது,  காமராஜர் என்பவர் வழிமறித்து தாக்க  முயன்றதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து தகவல் அறிந்த காடுவெட்டி குருவின் மருமகன் மனோஜ் என்பவர் தனது சகோதர் மதனுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காமராஜரிடம் தட்டிக்கேட்டுள்ளார்.
இதைடுத்து கனல், மனோஜூக்கும் மற்றொரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கனலரசன், மனோஜ் ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்டனர்.  காமராஜர் தரப்பினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  இதையடுத்து அவர்கள் ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் காடுவெட்டி கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

This slideshow requires JavaScript.