ஐபிஎல் 2018: டில்லி அணியில் தென் ஆப்ரிக்கா வீரர் கஜிஸோ ரபாடா நீக்கம்

டில்லி:

காயம் காரணமாக டில்லி டேர்டெவில்ஸ் அணியில் இருந்து கஜிஸோ ரபாடா நீக்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்ரிக்கான அணியின் வேகப்ந்து வீச்சாளரான கஜிஸோ ரபாடா ஐபிஎல் 2018ல் டில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு ரூ.4.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் கலந்துகொண்ட அவருக்கு முதுகு வலி ஏற்பட்டது.

பரிசோதனையில் அவருகஅகு காயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 22 வயதாகும் அவருக்கு 3 மாத ஓய்வு அவசியம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் ஐபிஎல் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே டில்லி அணியில் வேகப்பந்து வீச்சாளர் டிரன்ட் பவுல்ட்ல மற்றும் மீடியம் பேஸ் ஆல் ரவுண்டர்கள் முகமது ஷமி, ஆவிஷ்கான், கிரிஸ் மோரிஸ், டேனியல் கிறிஸ்டியன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நாளை மறுநாள் (8ம் தேதி) பஞ்சாப் அணியுடன் டில்லி அணி மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Kagiso Rabada out of IPL 2018 due to back injury, ஐபிஎல் 2018: டில்லி அணியில் தென் ஆப்ரிக்கா வீரர் கஜிஸோ ரபாடா நீக்கம்
-=-