நேற்று முன்தினம் வெளியான சசிகுமாரின் கிடாரி படத்தை கடுமையாக விமர்சிக்கிறார்கள் நெட்டிசன்கள். இங்கே சிலரது முகநூல் பதிவுகள்.
0
Gnanendran
கிடாரி – பின்னனி இசை – முதல்ல அந்த மனுசனை போடுங்கடா (கிடாரி பாசை )
சவ சவ சவ னு
 Mahendran Parasuraman
கிடாரி’ன்னு ஒரு குப்பை படத்தை பார்க்க நேர்ந்தது…காறி துப்புனா பத்தாது…   சோ அதனால
டூத் பேஸ்ட் போட்டு பல்ல வெளக்கிட்டு துப்பிட்டேன்…இப்ப தான் பிரஸ்சா இருக்கு.
Mano Manoj
சசிகுமார் சார் படத்துல இன்னும் நாலு கொலைய நாளும் சேத்து பன்னிக்கோங்க ஏத்துகிறோம்
ரொமான்ஸ் மட்டும் பன்னாதீங்க..
தாங்க மிடில
மனோகரன் மனசு
சசி குமார் தயவுசெய்து டைரக்ட் மட்டும் பண்ணலாமே கிடாரிபிடாரினு
பயமுறுத்திட்டு இருக்காம வர வர தமிழனுக்கு ரசனை மட்டமா போவுது ஆன்டவா
விலாசினி ரமணி
குட்டிப்புலியை விடவும் கிடாரி எவ்வளவோ மேல். படத்தில் வேல ராமமூர்த்தியைப் பார்த்தால் இதான்யா நடிப்பு என்று கத்தத்தோன்றியது. பார்க்கும் ஒவ்வொரு திரைப்படத்தையும் பற்றி எழுத வேண்டும்போல்தான் இருக்கிறது. ஆர்வம் இருக்கும் அளவிற்கு தேவை இருக்கிறதா என்ற கேள்வியில் வேண்டாம் என்று முடிவெடுக்கிறேன்.
ஆனாலும் சில படங்களைப் பற்றிய ஒரு சில வார்த்தைகளையாவது பேசாமல் இருக்க முடிவதில்லை. கிடாரி இரவுக்காட்சி பார்த்துவிட்டு வெளியில் வந்தவுடந்தான் நிசப்தம் எத்தனை அருமையானது என்று மீண்டும் உணர முடிந்தது. சசிகுமார் நிற்கும் போதும் நடக்கும்போதும் மாடியேறும்போதும் அவர் மீசைத் துடிக்கும்போதும் ஏன் சாப்பிடும்போதெல்லாம் அலற விடப்படும் இசையை எந்த ரசனையின் கீழ் ரசிப்பது என்று தெரியவில்லை. எத்தனை நல்ல படங்கள் எடுத்தாலும் இந்த ஹீரோயிசக் குப்பையைக்க கடந்து அதை ரசிக்க விடமாட்டார்கள் போலிருக்கிறது.
S Anbazhagan
கிடாரி அருமை , அட்டகாசம் , புதுமையா எடுத்து இருக்காங்க .இன்னும் கண்ணுக்குள்யே சசி இருக்காரு ன்னு ஒருத்தரு கூட வா எழுதலை திரும்பின பக்கம் எல்லாம் இப்படி பின்னி பெடல் எடுத்து இருக்கிங்களே