பல்வேறு புகார்கள் காரணமாக, இந்தியாவில் இருந்து தலைமறைவான வான நித்தியானந்தா, தனி நாட்டையே உருவாக்கி உள்ளதாக ஏற்கனவே வீடியோ வெளியிட்டிருந்தார்.தென் அமெரிக்காவில் உள்ள ஈகுவடாரில் ஒரு தனித் தீவு வாங்கி, அதைத் தனது தனி நாடாக அறிவித்து இருப்பதாக கூறியவர்,  “கைலாசா என்பது இந்துமதத்தைப் பின்பற்ற முடியாத நாடுகளில் வசிக்கும் அனைத்து இந்துக்களின் எல்லையற்ற நாடாகும் என்று தெரிவித்து, கொடியை அறிமுகப்படுத்தி இருந்தார். அதைத் தொடர்ந்து ஆகஸ்டு 22ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளி யிடப்போவதாக கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அப்போது,  கைலாசா நாட்டிற்கு உரிய கரன்சி நோட்டுகளும் தயாராக இருப்பதாகவும், வெளிநாடு களுக்கு ஒரு கரன்சியும், உள்நாட்டில் ஒரு கரன்சியும் பயன்படுத்தப்பட இருப்பதாகவும், உள்நாட்டு வர்த்தகத்துக்கு தங்க நாயணங்கள் உபயோகப்படுத்தப்படும் என்றும், வாடிகன் வங்கியை மாதிரியாக வைத்து, ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா உருவாக்கப்பட்டு உள்ளது. கைலாசாவின் ரிசர்வ் வங்கி, சட்டத்தின்படியே தொடங்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அவர் ஏற்கனவே அறிவித்தபடி இன்று கைலாசா நாட்டின் வர்த்தக நாணயங்களை நித்தியானந்தா வெளியிட்டுள்ளார். அதற்கான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுபோல கைலாசா நாட்டுக்கான விசா குறித்த தகவலையும் வெளியிட்டுள்ளார்.

கைலாசா இ-பாஸ்போர்ட்

உலகின் அதிக மக்கள்தொகை இணையத்தை உபயோகப்படுத்தும் நகரம்  கைலாசா இ-நேஷன். இது உலகளாவிய நகரத்தில் உள்ளது. மேலும் சனாதன இந்து தர்மத்தின் அறிவொளி பெற்ற நாகரிகத்தையும் அதன் பங்களிப்புகளையும் பயனர் நட்பு வழியில் அனைத்து நெட்டிசன்களுக்கும் கிடைக்கச் செய்து டிகோடிங் செய்து வருகிறது.

கைலாசா இ-பாஸ்போர்ட் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு அனைத்து அறிவு மற்றும் சேவை களின் நன்மைகளை முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. சனாதன இந்து தர்மம் டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் ஊடகங்கள் மூலம் உலகிற்கு வழங்க உள்ளது. இந்த அறிவு மற்றும் சேவைகள் வாழ்க்கை அறிவொளி, சுகாதாரம், மருத்துவம், கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சமூக, நீதித்துறை, அரசியல் மற்றும் சட்ட அமைப்புகள் ஆகிய துறைகளை உள்ளடக்கியது.

சேவைகள் விவரம்: கைலாசா மின்-பாஸ்போர்ட் ஆன்லைன் சூழலில் இந்து மதத்தின் பரந்த அறிவுத்தளத்தை அணுக உங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. சனாதன இந்து தர்மம் வழங்க வேண்டிய அனைத்து வளங்களையும், போதனைகளையும், வாழ்க்கை முறையையும் நீங்கள் அணுகலாம்.

நித்யானந்தா இந்து பல்கலைக்கழக படிப்புகள் மற்றும் திட்டங்கள்
நித்யானந்தேஸ்வர இந்து கோயில் சடங்குகள்
நித்யானந்தா இந்து நூலக வசனங்களும் புத்தகங்களும்
இந்து வாழ்க்கை முறை தயாரிப்புகள்….

தொடர்பான படிப்புகள் இங்கு நடத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஏற்கனவே  கைலாசா நாட்டின் கொடியை அறிமுகப்படுத்திய நித்தியானந்தா,  அத்துடன்  கைலாசா நாட்டில் உள்நாட்டுக் காவல், பாதுகாப்பு, நிதி, வர்த்தகம், வீட்டுவசதி, கல்வி, தொழில்நுட்பம், சுகாதாரம், மனித வள மேம்பாடு, மேம்பட்ட நாகரிகம் ஆகிய துறைகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது., விருப்பம் உள்ளவர்கள் அதில் குடிமக்களாகச் சேரலாம் என்றும் சில மாதங்களுக்கு முன்பு அவர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.