காந்தியின் உடலை கொன்றார் கோட்ஸே; பிரக்யாக் போன்றோர் நாட்டின் ஆன்மாவையே கொன்றுவிட்டனர்: கைலாஷ் சத்யார்த்தி

புதுடெல்லி:

நாதுரான் கோட்ஸே காந்தியின் உடலைத்தான் கொன்றார். ஆனால், பிரக்யா தாக்கூர் போன்றோர் நாட்டின் ஆன்மாவையே கொன்று கொண்டிருக்கிறார்கள் என நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யாத்ரி கூறியுள்ளார்.


மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட போபால் தொகுதி வேட்பாளர் பிரக்யா தாக்கூர் நாதுரான் கோட்ஸே தேசபக்தர் என்று கூறியிருந்தார்.

இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாஜகவிலிருந்தும் அவருக்கு கண்டனங்கள் எழுந்தன.
இதனையடுத்து, தான் அவ்வாறு கூறியதற்கு மன்னிப்பு கேட்டார். காந்தியை மதிப்பதாகவும், அவரது சேவையை நாடு என்றும் மறக்காது என்று கூறியிருந்தார்.

இது தொடர்பா நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யாத்ரி  கூறும்போது, நாதுரான் கோட்ஸே காந்தியின் உடலைத்தான் கொன்றார். ஆனால் பிரக்யா தாக்கூர் போன்றோர் நாட்டின் ஆன்மாவையே கொன்று விட்டனர் என்றார்.