உலக அளவில் ரூ.110 கோடி வசூலை தாண்டிய ‘கைதி…!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் கைதி . இது இவ்வருட தீபாவளி ரிலீசாக வெளிவந்தது .

கைதி தமிழகத்தில் மட்டும் ரூ. 5 கோடி வசூல் செய்துள்ளது. அது மட்டுமின்றி சென்னையில் மட்டும் முதல் நாள் 40 லட்சம் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் மட்டும் சுமார் 300 தியேட்டர்களில் கைதி ரிலீசாகியுள்ளது. கைதி படம் ஒரே இரவில், நான்கு மணி நேரத்தில் நடப்பது போல் உருவாகியுள்ளது. கார்த்தி கேரியரில் கைதி படம் ஒரு மிக பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சென்னையில் ‘பிகில்’ திரையிடப்பட்டு வந்த முக்கியத் திரையரங்குகளில் ‘கைதி’ மாற்றப்பட்டுள்ளதால் ‘கைதி’ படத்தின் வசூல் அதிகரித்துள்ளது .

மேலும், ‘கைதி’ படத்தின் திரையரங்க டிக்கெட், தொலைக்காட்சி உரிமை, டிஜிட்டல் உரிமை ஆகியவற்றின் மூலம் வந்த மொத்த வசூல் சுமார் 110 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டதாகக் கூறியுள்ளனர் .

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-