பிகிலுக்கு போட்டியாக தீபாவளிக்கு திரைக்கு வரும் ‘கைதி’……!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் கைதி. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இது அவருக்கு முதல் தமிழ்ப்படம்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள கைதி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் பிகிலுக்கு போட்டியாக தீபாவளிக்கு திரைக்கு வருகின்றதாம்,

கார்ட்டூன் கேலரி